திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
சிறு தொழிற்பூங்கா திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் மற்றும் அவிநாசி பகுதிகளில் பரவியுள்ள தொழிலை முறைப்படுத்த வேண்டும். வருங்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு பிரத்யேக சிறு தொழிற்பூங்காக்களை உருவாக்க வேண்டும்.
பிரத்யேக வாரியம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைக்க, தனி பின்னலாடை வாரியம் அவசியம்.
'பைபர் முதல் பேஷன் வரை' என்ற இலக்கை எட்ட இதுவே ஒரே வழி.
நவீன நகரம் வெளிநாட்டு வர்த்தகர்களை கவரும் வகையில் சாலைகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். ரோட்டோர பூங்காக்கள், நவீன பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு முன்னுரிமை தேவை.
சுற்றுச்சாலைகள் மாநகர நெரிசலைக் குறைக்க புதிய சுற்றுச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். பழைய சாலைகளை நான்கு வழிப்பாதையாக தரம் உயர்த்தி, 15 கி.மீ. சுற்றளவில் புதிய சாலைகளை இணைக்க வேண்டும்.
மேம்பாலங்கள் ரயில்வே கிராஸிங் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சிறு பாலங்கள் அமைக்க வேண்டும். ஒரு பாலத்திற்கு 10 ஆண்டுகள் என இழுத்தடிக்காமல், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும்.
புறநகர் லாரிப்பேட்டை கனரக மற்றும் கன்டெய்னர் வாகனங்கள் நகருக்குள் வருவதைத் தவிர்க்க வேண்டும். நகரின் வெளிப்பகுதியில் லாரிகளுக்கான பிரத்யேகத் திடல் அமைக்க வேண்டும்.
'தோழியர்' விடுதிகள் ஏற்கனவே கட்டப்பட்டு வீணாகிக் கிடக்கும் பெண் தொழிலாளர் விடுதிகளை உடனடியாகத் திறக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நகருக்கு அருகில் கூடுதல் விடுதிகள் கட்ட வேண்டும்.
குழாய் வழி எரிவாயு மின்சார செலவை குறைக்கவும், எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் குழாய் மூலம் எரிவாயு வழங்க வேண்டும். ஆரம்பக்கட்ட ஆலோசனையோடு நிற்காமல், இதை முழுமையான திட்டமாகச் செயல்படுத்த வேண்டும்.
தொழிலாளர் ஹாஸ்டல் 21 மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் சூழலில், அவர்களுக்கென விரிவான தங்குமிட வசதிகள் தேவை. மத்திய அரசின் 'சேப்' திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பை 10ல் இருந்து 20 சதவீதம் -ஆக உயர்த்த வேண்டும்.
வர்த்தக சந்திப்புகள் 2030-க்குள் 1 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை அடைய 'வாங்குபவர் -- விற்பவர்' சந்திப்புகளை அரசு நடத்த வேண்டும். புதிய நாடுகளுடனான வரிச்சலுகை ஒப்பந்தங்களைச் சாதகமாகப் பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்.
வட்டி மானியம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக சிறு, குறு நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். சாய ஆலைகள், பிரின்டிங், எம்ப்ராய்டரிங் பிரிவுகளுக்குப் புதிய மூலதன மானியம் வழங்க வேண்டும்.
போக்குவரத்துச் சலுகை நிறுவனங்கள் இயக்கும் தொழிலாளர் வாகனங்களுக்குச் சிறப்பு வரிச் சலுகை அளிக்க வேண்டும். தினசரி போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதைக் குறைக்க இதுவே தீர்வு.
'பசுமை திருப்பூர்' சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத உற்பத்தியைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியம் வழங்க வேண்டும். உலக அளவில் திருப்பூர் பிராண்ட்டை 'நீடித்த நிலைத்தன்மை' அடையாளமாக மாற்ற வேண்டும்.
குறைந்த கார்பன் உமிழ்வு ஆற்றல் திறன் கொண்ட இயந்திரங்களுக்கு மாறச் சலுகைகள் வழங்க வேண்டும். சர்வதேசச் சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப உற்பத்தியை மாற்றியமைக்க அரசு உதவ வேண்டும்.
பொது பனியன் சந்தை குறு, சிறு உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்கவும், மக்கள் வாங்கவும் 4 இடங்களில் சந்தைகள் அமைக்க வேண்டும். தனியார் கடைகளைச் சார்ந்து இருப்பதைத் தவிர்த்துப் பொதுச் சந்தை உருவாக்கப்பட வேண்டும்.
கண்காட்சி அரங்கு கோவை 'கொடீசியா' பாணியில் திருப்பூரில் நிரந்தரத் தொழில் கண்காட்சி மையம் அமைக்க வேண்டும்.
கோவை - - திருப்பூர் -- ஈரோடு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து விரைந்து செயல்படுத்த வேண்டும்.
முதுகெலும்பை முறித்த மின் கட்டண உயர்வு திருப்பூர் பின்னலாடைத் துறையின் முதுகெலும்பை மின்கட்டண உயர்வு முறித்துப்போட்டுள்ளது. தொழில் முனைவோரின் இந்த முக்கிய கோரிக்கையை 'வெற்றி' வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டணக் குறைப்பே தீர்வு: பயன்பாட்டு மின் கட்டணத்தை விட, நிலை கட்டணம் மற்றும் பீக் ஹவர் கட்டணம்ஆகியவை மிகக் கடுமையாக உயர்ந்து தொழிலை முடக்கியுள்ளன.
கூட்டு நடவடிக்கை அவசியம்:
வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்பவர்கள், கட்சிப் பாகுபாடின்றி கூட்டாக இணைந்து, சிறு மற்றும் குறு நிறுவனங்களைக் காக்க இந்த கூடுதல் கட்டணச் சுமைகளைக் குறைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் பாதுகாப்பு:
சர்வதேசப் போட்டிகளுக்கு இடையே இயங்கும் திருப்பூர் தொழில்துறையினர், உற்பத்திச் செலவைக் குறைக்க மின் கட்டணச் சீரமைப்பு என்பது மிக அத்தியாவசியமான கோரிக்கையாகும்.
மேலும்
-
அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு