வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்
தேனி:மாவட்டத்தில் ஒரே இடத்தில் 5 முதல் 14 ஓட்டுச்சாவடி இருந்த இடங்களில் எளிதில் அடையாளம் காண பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் 64 அமைவிடத்தில் 5 முதல் 14 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒரே அமைவிடத்தில் 5க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் இருக்கும் நிலையில் அவற்றை எளிதில் அடையாளம் காண்பது சிரமமாகும். எனவே வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளை எளிதில் கண்டறிய 5 ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் உள்ள அமைவிடங்களில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் வெவ்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேனி நகர்பகுதியில் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் ஓட்டுச்சாவடிகள் வண்ணமயமாக காட்சியளித்தன. இது தவிர பெண்கள்மட்டும் நிர்வகிக்கும் ஓட்டுச்சாவடிகள் பிங்க் நிறத்திலும், பசுமை ஓட்டுச்சாவடிகள் பச்சை நிறத்திலும் காட்சியளித்தன.