மதுபாட்டில் வைத்திருந்த முதியவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த முதியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கீழ்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னாபிள்ளை, 75; என்பவர் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 200 பணத்தை பறிமுதல் செய்த கீழ்குப்பம் போலீசார் சின்னாபிள்ளை மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement