மதுபாட்டில் கடத்தல்: இருவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பைக்கில் மதுபாட்டில் கடத்தி சென்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் ஏப்ரல் 25 ல் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சித்தலுார் - கொங்கராயபாளையம் சாலை வழியாக சென்ற டி.என்.15.எம்.எப்.7590 பதிவு எண் கொண்ட பல்சர் பைக் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் பைக்கினை நிறுத்திவிட்டு, அதில் வந்த இருவர் தப்பியோடினர்.
போலீசார் பைக்கினை சோதனை செய்த போது 40 பிராந்தி பாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து 40 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கினை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கொங்கராயபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் சிபிராஜ், 21; வெங்கடேசன் மகன் விஜயகுமார், 20; ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement