முகூர்த்த கால் விழா

திருப்பரங்குன்றம்: விளாச்சேரி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் விழா ஏப்ரல் 26 நடந்தது. காலையில் மூலவர்கள் காசி விசுவநாதர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை முடிந்து காப்பு கட்டப்பட்டது.

கோயில் வளாகத்தில் யாகம் வளர்த்து, பூஜை முடிந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏப். 28ல் காலை 6:30 மணிக்கு கோ பூஜை முடிந்து, காலை 7:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டு, காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.

Advertisement