அறுவை சிகிச்சையில் கல்லூரி மாணவி பலி

அன்னூர்: அன்னூர், இந்திரா நகரை சேர்ந்த பேரூராட்சி தூய்மை பணியாளர் பத்மாவதி, 40. இவரது மகள் ஹரிணி, 19. கல்லுாரி மாணவி.இவருக்கு மூச்சு விடுவதில் தொந்தரவு இருந்தது. கணேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு இதயத்துடிப்பு குறைந்ததாகவும் கோவில்பாளையத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து உறவினர்கள் ஹரிணியை கோவில்பாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஹரிணி இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் தனியார் மருத்துவமனை மீதும், டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement