சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; மேல்முறையீடு செய்ய அவகாசம்

4

நமது நிருபர்



சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.


துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கடை திறந்ததாக கூறி, போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் இறந்தனர். இதை கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ், போலீசார் செல்லதுரை, வெயிலுமுத்து ஆகியோர் 2020ல் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.



இந்த 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 9 பேரும் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக குற்றவாளிகள் 9 பேருக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

Advertisement