எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசனை விட அதிக வாக்குகள் பெறுவாரா விஜய்?
தமிழகத்தின் 17வது சட்டசபைத் தேர்தல் நேற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையே தான் பிரதான போட்டி என்றாலும், நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முதல் முறையாக போட்டியிட்டது.
அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை - பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். சினிமாவில் கதாநாயகனாக நடித்து அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர். அதனால், அவரது வழியில் அரசியல் ஆசையில் சில நடிகர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தனர். அவர்களில் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள்.
திமுக.,வில் இருந்து வெளியேறி தனியாக அதிமுக., என்ற கட்சியை துவங்கிய பின்னர் 1977ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 43,065. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வை 13,687 வாக்குகளைப் பெற்றார். எம்ஜிஆர் பெற்ற வாக்கு சதவீதம் 56.23.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. அத்தேர்தலில் முதல் முறையாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 61,337. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கோவிந்தசாமி 47,560 வாக்குகள் பெற்றார். விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதம் 40.4
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பெற்ற வாக்குகள் 51,481. அவர் பெற்ற வாக்கு சதவீதம் 33.26. ஆனாலும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து யாருடனும் கூட்டணி இல்லாமல் இந்த 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய். சென்னை பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும், திருச்சி கிழக்கு தொகுதியில் 2,17,397 வாக்காளர்களும் உள்ளனர்.
கடந்த 2021ல் நடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் 1,01,330, திருச்சி கிழக்கு தொகுதியில் 1,01,730 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை மீறி விஜய் இந்த 2026 தேர்தலில் எவ்வளவு வாக்குகளைப் பெறப் போகிறார், இரண்டிலும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது வெற்றியைப் பொறுத்தே அவரது கட்சியின் எதிர்காலம் அமைந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
எம்ஜிஆர் 56.23 சதவீதம், விஜயகாந்த் 40.40 சதவீதம், கமல்ஹாசன் 33.26 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளனர். அவர்களின் வாக்கு சதவீதத்தை விஜய் மிஞ்சுவாரா என்பது மே 4 அன்று தெரிந்துவிடும்.
விஜயின் தனி வாழ்க்கை , விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட்து அல்ல. சினிமாவில் நடிப்பு, ரசிகர் கூடடம் , திடீர் எழுச்சி..
அரசியல்மேடையில் நடிப்பு, 15 கோடி வரி yeppu,, பொண்டாட்டி,பிள்ளைகளிடம் துரோகம், கரூர் சம்பவத்தில் எதுவுமே நடவாதது போல் அரசியல், டி.எம்.க்கே மீது வெறுப்புணர்ச்க்கி தாக்குதல், செத்த 41 ரசிகர் பதில் இல்லை. தமிழ் நாட்டின் saabakedu.
விஜய் கட்சி யாரோடும் அணி சேராமல் தானாக போட்டியிடுவதின் மூலம் தாங்கள் வேறுபட்ட கட்சி என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரது கட்சி வேட்பாளர்களில் 19% பேர், கிரிமினல் குற்ற வழக்குகளில் கோர்ட்-க்கு போய்க்கொண்டிருப்பவர்கள். ஒரு புது கட்சி சுத்தமாக இல்லாமல் பழைய கிரிமினல் அரசியல்வாதிகளை சேர்த்துக்கொண்டிருப்பதால் விஜய்யின் சாயம் வெளுத்து விட்டது. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய கழக மட்டைகளே புதுக்கட்சி பெயரில் கூட "கழகம்" இருப்பதை காண்க.
எம்.ஜி.ஆர்-ஐ விட அதிக ஓட்டுகள் 90% பெற முடியாது. கமலஹாசனை விட அதிக ஓட்டுகள் பெறுவது 75% சாத்தியம். விஜயகாந்தை மிஞ்சுவது 50% வாய்ப்புதான். மேலும் இரண்டு இடங்களில் போட்டியிடுபவர், தனது வெற்றியை தானே சந்தேகிக்கிறார் என்பது எனது தாழ்மையான கருத்து.
அப்படி ஒன்றும் விஜய் ஓட்டுக்களை அள்ளிவிட்டதாக தெரியவில்லை. எம்.ஜ.ஆர் தனி மக்களின் இதயக்கனி. அவர் மாதிரி விஜய் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு காணுவது கொஞ்சம் ஓவர். அவரே கட்சி ஆரம்பித்து
சில வருடங்கள் கழித்து தான் ஆட்சிக்கு வந்தார்.எல்லா கட்சியிலிருந்த அதிருப்தியாளர்கள் தவெக வுக்கு வந்திருப்பதால் அவர்களுக்குத்தான் ரொம்ப நம்பிக்கை. ஓட்டுகளை பிரிக்கும் மகத்தான பணியை விஜய் செய்துள்ளார்.
இந்துக்களை கேவலப்படுத்திய விடியல் ஸ்டாலின் குரூப் துபாய் லூலூ மால் மேனேஜ்மெண்ட்டை கையில் எடுத்துக்கொள்ளலாம். பணம் மிஞ்சும்
கமலஹாசனை விட ?? /// கமலஹாசனுக்கு இந்த பில்டப்பு தேவையா??
ஐயா, கனவு காண்பது கொஞ்சம் ஓவர் என்று என்று தோன்றுகிறது
இந்த கணக்கில் புரட்சிதலைவர் பெயரை லிஸ்டில் சேர்த்த புண்ணியவான் யாரோ!!!!!
கண்டிப்பாக கமல்ஹாசனை விட அதிகம்
விஜய் 20 சதவிகிதம் வாக்குகள் பெறுவார்
திரு விஜயகாந்த் மற்றும் திரு கமலஹாசன் பெற்ற வாக்கு சதவிகிதங்களை விட இவர் கூடத்தான் பெறுவார்.மேலும்
-
பஸ் ஸ்டாண்ட் அலங்கோலம்: மாநகராட்சி 'பாராமுகம்'
-
நியூசி., ஒப்பந்தம்: பின்னலாடை துறைக்கு பொற்காலம்
-
இரு வேறு இடத்தில் அலுவலகங்கள் விவசாயிகள் அலைக்கழிப்பு
-
மக்கள் அறப்போராட்டத்துக்கு வெற்றி:முதலிபாளையம் பாறைக்குழி 'மாசடைந்த பகுதி' மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
-
பொய்யப்பாக்கம் கிராமத்தில் 97 சதவீதம் ஓட்டுகள் பதிவு
-
பொழுதுபோக்கு பூங்காவா... பொல்லாத ஆபத்தா?