இரண்டாவது நாளாக சரிந்த சந்தை மனமாற்றத்தில் முதலீட்டாளர்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மற்றும் மேற்கு ஆசிய போர் குறித்த அமைதி பேச்சில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாக, இந்திய பங்கு சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இரண்டு நாட்களாக நீடிக்கும் இந்த சரிவு போக்கினால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 852 புள்ளிகள் சரிந்து 77,664 புள்ளிகளிலும், நிப்டி 205 புள்ளிகள் இறங்கி 24,173 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் நிப்டி 400 புள்ளிகளுக்கும் மேலாக குறைந்துள்ளது. இந்த சரிவானது, சந்தையின் போக்கில் ஏற்பட்டுள்ள தெளிவான மாற்றத்தை பிரதிபலிப்பதாக, 'லிவ்லாங் வெல்த்' நிறுவனர் மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளரான ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தீவிரமடைந்துள்ளதாலும், உள்நாட்டு சூழல்கள் சந்தையை தாங்கிப் பிடிக்க தவறியதாலும், முதலீட்டாளர்கள் சந்தையை தவிர்க்கும் மனநிலைக்கு மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
முதலீட்டாளர்களின் மனநிலை 'உறுதியான' நிலையில் இருந்து 'தவிர்க்கும்' நிலைக்கு மாறியிருப்பதை சந்தையின் போக்கு பிரதிபலிக்கிறது.
@block_B@ சரிவுக்கான காரணங்கள்
* அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி பேச்சு இழுபறி
* கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது .
* அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவது.
* டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து உள்ளது .
* இந்திய நிறுவன பங்குகள் மீதான மதிப்பீட்டை 'அண்டர்வெயிட்' நிலைக்கு குறைத்து ஹெச்.எஸ்.பி.சி., கணிப்பு வெளியிட்டிருப்பது ஆசிய பங்கு சந்தைகள் சரிவுடன் முடிந்தது; அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் துவங்கியிருப்பதுblock_B
மேலும்
-
தங்க காசு வழங்க க்யூ ஆர் கோடு; கோவை வடக்கில் விநியோகம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு... 88.21 சதவீதம் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
-
பெண்கள் பிங்க் ஓட்டுச்சாவடிகளில் ஆர்வமுடன் ஓட்டளிப்பு
-
இந்த முறையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்கள் ஓட்டளிக்கவில்லை
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் 45 நிமிடங்கள் தாமதம்
-
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை