இந்த முறையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்கள் ஓட்டளிக்கவில்லை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மண்டல, கண்காணிப்பு குழுக்களின் தனியார் வாகன டிரைவர்கள் பலர் பணி காரணமாக ஓட்டு போடவில்லை.
மாவட்டத்தில் 2024 லோக்சபா தேர்தல் பணியில் மண்டல குழுக்கள், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கிராபர் குழுக்கள், கணக்கு குழுக்கள் பணியில் இருந்த நிலையில், இவர்களுக்கு அரசு வாகனங்கள் தவிர்த்து தனியார் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
ஒப்பந்த அடிப்படையில் நிறைய டிரைவர்கள் பணியில் இருந்தனர். காலை 6:00 மணி முதல் துவங்கும் இவர்களது பணி தேர்தல் முடியும் போது தான் ஓயும். இவர்கள் அலுவலர்களை அழைத்து செல்லவும், தொடர்ந்து பணியில் ஈடுபடவும் நிர்பந்திக்கப்பட்டதால் பெரும்பாலானோர் ஓட்டு போட முடியாமல் திண் டாடினர்.
அதிகாரிகள் அலைச் சலில் இருந்ததாலும் அடுத்தடுத்து கண் காணிப்பு பணிகள் இருந்ததாலும் மனசு வைக்கவில்லை. இதனால் பல டிரைவர்கள் ஓட்டு போடவில்லை.
தேர்தல் ஆணையம் அடுத்த முறையாவது இது போன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் டிரைவர்களுக்கு ஓட்டு போட ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்கு தொடர்ந்து நுாறு சதவீத ஓட்டு விழிப்புணர்வு செய்து வரும் மாவட்ட நிர்வாகம், இப்பணிகளில் ஈடுபடும் தனியார் வாடகை வாகன டிரைவர்கள் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வாடகை வண்டி டிரைவர்கள் பலர் ஓட்டு போடவே இல்லை.
காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி வரை என்றும், மதியம் 2:00 மணி முதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கும் இரவு வரை என்றும் இரு 'ஷிப்ட்டுகளில்' டிரைவர்களை பணி அமர்த்தினால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய முடியும் என பல அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து சொதப்பி வருகிறது.
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்