ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் 45 நிமிடங்கள் தாமதம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கிய போது இயந்திர கோளாறு காரணமாக 45 நிமிடம் தாமதம் ஏற்பட்டு வாக் காளர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் மொத்தம் 269 ஓட்டு சாவடிகளில் சுந்தரராஜ புரம், கணபதி சுந்தர நாச்சியார் புரம், துரைச்சாமி புரம் உள்ளிட்ட 14 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை என கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது.
ஓட்டுப்பதிவு தொடங்கிய போது திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட அறை 5 எண் ஓட்டு சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை. 20 நிமிட தாமதத்திற்கு பின் மக்கள் ஓட்டளித்தனர்.
சங்கரபாண்டியபுரம் தெருவில் உள்ள நடராஜா நடுநிலைப் பள்ளியில் 3 ஓட்டு சாவடி மையங்கள் உள்ள நிலையில் 100வது ஓட்டு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 45 நிமிடம் தாமதம் ஏற் பட்டது.
ராஜபாளையம் ராஜூக்கள் பெரிய சாவடியில் இரண்டு ஓட்டுப்பதிவு மையங்களுக்கான சாய்வு தளம் ஏற்றம் அதிகமாக இருந்ததால் முதியோர் மாற்றுத் திறனாளிகள் உபயோகப் படுத்த முடியா மலும் மூன்று சக்கர வாகனமும் பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி ஓட்டு சாவடி, ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிங்க் ஓட்டு சாவடிகள் பலூன்கள் மட்டும் கட்டப்பட்டு அதற்கேற்ப குடிநீர், மொபைல் போன் பாதுகாப்பிற்கு என எந்த வசதிகளும் இன்றி சாதாரணமாகவே இருந்தது வாக்காளர்களிடையே கேள்வி எழுந்தது.
ஒரு சில இடங்களில் லேசான சலசலப்புடன் சுமுகமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு