பண்டு துளிகள்
'இன்வெஸ்கோ' நிறுவனத்தின் புதிய இண்டெக்ஸ் பண்டுகள்
'இ ன்வெஸ்கோ இந்தியா பி.எஸ்.இ., சென்செக்ஸ் இண்டெக்ஸ் பண்டு, இன்வெஸ்கோ இந்தியா பேங்க் நிப்டி இண்டெக்ஸ் பண்டு' ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முதலீடு செய்ய, ஏப்ரல் 23 முதல் மே 7 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச முதலீடு 100 ரூபாய். முன்னணி 30 நிறுவனங்கள் மற்றும் வங்கி துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், இந்த பண்டுகள் செயல்படும்.
'அரிஹந்த் கேபிட்டல்' புதிய ஏ.ஐ.எப்., அறிமுகம்
பெ ரிய நிறுவனங்களை தவிர்த்து, சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில், 'அரிஹந்த் கேபிட்டல்' நிறுவனம் 'கேட்டகரி மூன்று ஏ.ஐ.எப்., பண்டு ஒன்றை துவங்கியுள்ளது. இந்த வகை பண்டுகள் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கானவை. குறைந்தபட்ச முதலீடு ஒரு கோடி ரூபாய். குறைந்த கவனத்தை பெற்ற, ஆனால், அதிக வளர்ச்சி திறன் கொண்ட நிறுவனங்களை கண்டறிந்து முதலீடு செய்வதே இதன் நோக்கம்.
'போல்க்ஸ் மோட்டார்'
புதிய ஏ.ஐ.எப்., அறிமுகம்
'போ ல்க்ஸ் மோட்டார்' நிறுவனம் தனது 'போல்க்ஸ் பண்ட்ஸ்' என்ற பெயரில் ஏ.ஐ.எப்., பண்டு ஒன்றை துவங்க செபியிடம் அனுமதி பெற்றுள்ளது. மின்சார வாகன உதிரிபாக துறைக்காக இந்தியாவில் துவங்கப்படும் முதல் ஏ.ஐ.எப்., பண்டு இதுவாகும். இதன் வாயிலாக, 500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 100 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான உட்கட்டமைப்பு, கிடங்கு மேலாண்மை, டேட்டா சென்டர் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்வதே இதன் நோக்கம்.
ஈக்விட்டி போகஸ்டு எஸ்.ஐ.எப்.எடெல்வைஸ் அறிமுகம்
'அ ல்டிவா ஈக்விட்டி எக்ஸ் - டாப் 100 லாங் - ஷார்ட் பண்டு' என்ற பெயரில், பண்டு ஒன்றை 'எடெல்வைஸ்' மியூச்சுவல் பண்டு அறிமுகம் செய்துள்ளது.
இதில், வரும் மே 18 முதல் ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம். முதல் 100 நிறுவனங்களுக்கு அடுத்ததாக உள்ள மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எக்ஸிட் லோடு' ரத்து 'ஒயிட்ஓக் கேபிட்டல்' பண்டு
ஏ ப்ரல் 27ம் தேதி முதல் ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிடு பண்டுகளில் செய்யப்படும் புதிய முதலீடுகளுக்கு வெளியேற்ற கட்டணம் முழுமையாக நீக்கப்படுவதாக 'ஒயிட்ஓக் கேபிட்டல்' மியூச்சுவல் பண்டு அறிவித்துள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை எடுக்கும்போது, அபராத கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. லிக்விட் மற்றும் ஆர்பிட்ரேஜ் பண்டுகளுக்கு பழைய கட்டண முறையே தொடரும். ஏற்கனவே உள்ள முதலீடுகளுக்கும் பழைய விதிகளே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்க காசு வழங்க க்யூ ஆர் கோடு; கோவை வடக்கில் விநியோகம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு... 88.21 சதவீதம் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
-
பெண்கள் பிங்க் ஓட்டுச்சாவடிகளில் ஆர்வமுடன் ஓட்டளிப்பு
-
இந்த முறையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்கள் ஓட்டளிக்கவில்லை
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் 45 நிமிடங்கள் தாமதம்
-
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை