மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு செபியின் புதிய கட்டுப்பாடுகள்

மி யூச்சுவல் பண்டு நிறுவனங்களை ஆரம்பிப்பவர்கள் வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதால், அதற்கு 'ஸ்பான்சராக' குடும்ப அறக்கட்டளைகள் செயல்பட முடியாது என, 'செபி' தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

ஏன் இந்த கெடுபிடி? 'பேமிலி டிரஸ்ட்' என்பது குடும்ப சொத்துகளை பாதுகாக்கும் ஒரு தனியார் அமைப்பு என்பதால், அதில் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கணக்குகளை சட்டப்படி எளிதாக கண்காணிக்க முடியும்; வெளிப்படைத்தன்மையும் அதிகம்.


முக்கிய தகவல்கள்





* 'செபி' விதி 2026ன் படி, மியூச்சுவல் பண்டு 'ஸ்பான்சர்' கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனமாக மட்டுமே இருக்க வேண்டும்
* 'பேமிலி டிரஸ்ட்' சட்டப்படி 'கார்ப்பரேட் அமைப்பாக' கருதப்படாததால், அவற்றுக்கு இனி அனுமதி இல்லை

* செபியின் விதிப்படி புதிய மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை துவங்க குறைந்தபட்சம் 150 கோடி ரூபாய் நிகர மதிப்பு அவசியம்

* இந்த மூலதனத்தை 'பங்கு மற்றும் முன்னுரிமை பங்குகள்' என கலந்து வைப்பது குறித்து 'பர்ஸ்ட் வாட்டர் கேபிடல் அட்வைசரி' நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு 'இது கொள்கை சார்ந்த விஷயம்' என கூறி செபி பதில் அளிக்கவில்லை.

Advertisement