பொழுதுபோக்கு 14%; காப்பீடு 1% இளைஞர்களின் மனப்போக்கு
இ ந்திய இளைஞர்களிடையே நிலவும் நிதி திட்டமிடல் குறித்த இடைவெளியை 'நிவா புபா' நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய இளைஞர்களில் 51 சதவீதம் பேர் 'ஹெல்த் இன்சூரன்ஸை' தங்களின் முக்கிய நிதி இலக்காக கருதினாலும், உண்மையில் 14 சதவீதம் பேரிடம் மட்டுமே பாலிசி உள்ளது. மருத்துவ அவசரகால தயார் நிலையில் 10க்கு 4.54 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள இளைஞர்களில், 76 சதவீதம் பேர் இப்போதும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர்.
'தற்போது ஆரோக்கியமாக இருக்கிறோம்' என்ற தவறான நம்பிக்கையால் 38 சதவீதம் பேர் இன்சூரன்ஸை தள்ளிப்போடுகின்றனர்; பொழுதுபோக்கிற்கு 14 சதவீதம் செலவிடும் இவர்கள், இன்சூரன்ஸிற்கு ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்குகின்றனர்.
இன்சூரன்ஸை ஒரு பாதுகாப்பாக பார்க்காமல் செலவாக கருதுவதால், எதிர்பாராத மருத்துவ செலவுகள் அவர்களின் பல ஆண்டு கால சேமிப்பை ஒரே நாளில் கரைத்துவிடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்க காசு வழங்க க்யூ ஆர் கோடு; கோவை வடக்கில் விநியோகம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு... 88.21 சதவீதம் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
-
பெண்கள் பிங்க் ஓட்டுச்சாவடிகளில் ஆர்வமுடன் ஓட்டளிப்பு
-
இந்த முறையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர்கள் ஓட்டளிக்கவில்லை
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் 45 நிமிடங்கள் தாமதம்
-
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை