இன்று ரூ.32,000 கோடிக்கு அரசு பத்திரங்கள் ஏலம்

மத்திய அரசு தனது நிதி தேவைகளுக்காக இன்று 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை ஏலம் விட உள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 'இ-குபேர்' தளம் வாயிலாக ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலத்திற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 9 மணி முதல் 9:30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Advertisement