கேமராவில் உதயநிதி என ஆங்கிலத்தில் ஒலித்ததால் 30 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிப்பு
வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றி யம், ஆலாம்பட்டி பஞ்., ஓட்டுச்சாவடி மையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் உதயநிதி என ஆங்கிலத்தில் ஒலித்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் ஒன்றியம், ஆலாம்பட்டி பஞ்சாயத்து ஓட்டுச்சாவடியில், பொதுமக்கள் வழக்கம்போல் ஓட்டுகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவில் உதயநிதி என்ற பெயர் ஆங்கிலத்தில் ஒலித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனடியாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறி அதனை சரி செய்தனர்.
இந்த சம்பவத்தால், அரைமணி நேரத்துக்கு மேலாக ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டதது. பின்னர் வழக்கம் போல் ஓட்டுப்பதிவு துவங்கியது.
மேலும்
-
கூடுதல் ஓட்டுப்பதிவால் கவலையில் திரிணமுல்; ஜனநாயகம் வென்றதாக பிரதமர் பெருமிதம்
-
தமிழக தேர்தலில் பதிவான ஓட்டு விபரம் இன்று மாலை வெளியாக வாய்ப்பு
-
துபாய் புறப்பட்டார் உதயநிதி; கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்
-
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசனை விட அதிக வாக்குகள் பெறுவாரா விஜய்?
-
சோதனைக்கு வந்த அதிகாரிகளை கண்டுபிடிக்கணும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; மேல்முறையீடு செய்ய அவகாசம்