கோவில் 'பதி'க்கு செல்ல முடியாதபடி வேலி நெடுஞ்சாலையில் ஒரு சமுதாயத்தினர் மறியல்

சேலம்; சேலம் மாவட்டம் காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டி காலனி, கொல்லங்குட்டை உபரிநீர் ஓடையில், ஒரு சமுதாயத்தினரின் காளியம்மன் கோவில், 'பதி' வேப்பமரத்தின் கீழ் உள்ளது. அந்த சமுதாயத்தினர், மாசியில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அந்த, 'பதி'யை ஒட்டி தனியா-ருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.


நேற்று காலை, 9:00 மணிக்கு, 'பதி'க்கு செல்ல முடியாதபடி, அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி போட்டு அடைக்கும் பணியை அதன் உரிமை-யாளர் மேற்கொண்டார். இதை தட்டி கேட்ட-போது, 'என் நிலத்தில் வேலி போட்டுள்ளேன். மற்றவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை' என கூறினார்.இதை கண்டித்து, 11:30 மணிக்கு அச்சமுதாயத்-தினர், சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, ராக்கிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சர்வீஸ் சாலை மற்றும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்-டனர். ஆட்டையாம்பட்டி போலீசார் பேச்சு நடத்-தியதால், வேலி அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட-வர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்-பட்டு, 5 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement