தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 5 நாட்களில் ரூ.2080 குறைவு
சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.480 குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 20ம் தேதி முதல் கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2080 சரிந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில தினங்களாகவே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில், ஒரு லட்சம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.
ஆனால், கடந்த 3 தினங்களாக தொடர்ந்து இறங்கி வந்த 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, நேற்று (ஏப்ரல் 23) சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 ஆகவும், கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160ஆக விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்திருப்பது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 24) காலையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800 ஆக விற்பனையாகிறது. அதேபோல, கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.265க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
கூடுதல் ஓட்டுப்பதிவால் கவலையில் திரிணமுல்; ஜனநாயகம் வென்றதாக பிரதமர் பெருமிதம்
-
தமிழக தேர்தலில் பதிவான ஓட்டு விபரம் இன்று மாலை வெளியாக வாய்ப்பு
-
துபாய் புறப்பட்டார் உதயநிதி; கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்
-
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசனை விட அதிக வாக்குகள் பெறுவாரா விஜய்?
-
சோதனைக்கு வந்த அதிகாரிகளை கண்டுபிடிக்கணும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; மேல்முறையீடு செய்ய அவகாசம்