தொகை வழங்காததால் ஆசிரியர்கள் தர்ணா

போத்தனூர்: சட்டசபை தேர்தல் கிணத்துகடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிய, சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் என, 250 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

இவர்கள் நேற்று முன்தினம் மதுக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பெரும்பாலானோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்றனர். 35க்கும் மேற்பட்டோருக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.

இதனால் அவர்கள் தாலுகா அலுவலகத்திலேயே இருந்தனர். மாலையில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், அனைவரும் தங்களது ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். பணித்தொகையை கேட்டுள்ளனர்.

ஆனால் இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படாததால், தொகை வழங்க தாலுகா அலுவலக ஊழியர்கள் மறுத்துள்ளனர். அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வரும், 27ம் தேதி தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தர்ணா முடிவுக்கு வந்தது.

Advertisement