என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் மோடி; மேற்குவங்க படகோட்டி பெருமிதம்
நமது சிறப்பு நிருபர்
என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் என பிரதமர் சவாரி செய்த படகினை இயக்கிய, 72 வயது மேற்கு வங்க படகோட்டி கவுரங்க பிஸ்வாஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை 7 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டார். அங்குள்ள கங்கை நதியின் கிளையான ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார். அப்போது தான் எடுத்த புகைப்படங்களை பிரதமர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, 'கங்கை நதி மேற்கு வங்கத்தின் ஆன்மா வழியாக பாய்கிறது.










இங்கு படகு சவாரி செய்தது, கங்கை அன்னைக்கு என் நன்றியை தெரிவிக்க கிடைத்த வாய்ப்பு. இந்த பயணத்தில் வித்யாசாகர் சேதுவையும், ஹவுரா பாலத்தையும் மிக அருகில் ரசித்தேன்' என, குறிப்பிட்டிருந்தார். பிரதமர் சவாரி செய்த படகை இயக்கிய 72 வயதான கவுரங்க பிஸ்வாஸ் கூறுகையில், ''பிரதமர் மோடி என்னிடம் வந்து, வங்காள மொழியிலேயே என் பெயரை விசாரித்தார்.
எனக்கு ஹிந்தி மொழி சரளமாகத் தெரியாது; அதனால் நானும் வங்காள மொழியிலேயே அவருக்குப் பதிலளித்தேன். நதியின் மையப்பகுதிக்குச் சென்ற பிறகு, பிரதமர் மோடி அதிகம் பேசவில்லை.
நாங்கள் கரைக்குத் திரும்பிய பிறகுதான், அவர் என்னை அருகில் அழைத்து, மிகவும் அன்புடன் என்னை இறுகத் தழுவி கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்'' என்றார். அந்த 35 நிமிடப் படகு சவாரிக்கு, பிரதமர் படகோட்டிக்கு 1,000 ரூபாயைக் கட்டணமாக வழங்கினார்.
பிரதமர் வருகையின் போது, சவாரி செய்ய ஏற்பாடுகளை செய்த 44 வயதான படகோட்டி பிரபீர் பிஸ்வாஸ் கூறுகையில், ''காலை 7 மணி கடந்திருந்த நிலையில், சிலர் அங்கு வந்து ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்தனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பதை முதலில் ஏதும் சொல்லவில்லை.
பிரதமர் மோடி படித்துறையின் படிகளில் இறங்கி வருவதைக் கண்டபோதுதான், இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமையப்போகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று கூறினார்.
வாசகர் கருத்து (27)
தருமி - ,
26 ஏப்,2026 - 06:22 Report Abuse
சீக்கிரம் பாஞ்சிலட்சம் கிடைக்கப்போகுது... 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
25 ஏப்,2026 - 15:03 Report Abuse
மக்கள் நடுவே ரயிலில் பயணிக்கிறோம் என்று பந்தா காட்டியவர், கூடவே பயணித்த நபரை நகரச் சொல்லி கன்னத்தில் அறைந்தவர் பற்றி நாம் மறந்து விட்டோம். காசு கொடுத்து செட்டப் செய்து சிமண்ட் ரோடு போடுவது, வயல் நடுவே சிவப்பு கம்பளம் விரிப்பது, டீ கடையில் டீ குடுப்பது போல பாவனை செய்து போஸ் மட்டும் கொடுப்பது போல தமிழக உபிக்கள் இதையும் நினைத்து விட்டனர். 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
25 ஏப்,2026 - 13:45 Report Abuse
தேர்தலுக்கு பிறகு அவரை பார்க்க முடியுமா . 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
25 ஏப்,2026 - 13:16 Report Abuse
தல .... எங்க கிட்னி திருட்டுக் கழகத்தைப் பத்தி ஈவேரா சொன்னது என்னன்னு உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல ..... அவங்க தேர்தல் வெற்றிக்காக எதை வேணா செய்வாங்க - ஆமா, எதை வேணா - என்று சொல்லியிருக்காரு .... நீங்க டுமீலு நாட்டுல இருந்திருந்தா உங்க துடுப்பைப் போட்டு ஓட்ட ஓவல் சைசுல படகு கூட ஏற்பாடு செஞ்சிருப்பாங்க .... உங்க நேரம், அங்க போயி பொறந்துட்டீங்க ...... 0
0
Reply
முருகன் - ,
25 ஏப்,2026 - 11:50 Report Abuse
இதை சாதாரண நாட்களில் மட்டும் செய்யவே மாட்டார்கள் இந்த அரசியல்வாதிகள் 0
0
guna - ,
26 ஏப்,2026 - 08:25Report Abuse
ஸ்டாலின் டீ கடையில் டீ குடித்ததை போலவா 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
25 ஏப்,2026 - 11:46 Report Abuse
கட்டிப்பிடிப்பதையும் சிரிப்பதையும் ரீல்ஸ் எடுத்து போட்டதை நீக்க உத்தரவு போட்டு . என்ன செய்ய ?? 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
25 ஏப்,2026 - 10:39 Report Abuse
அது அன்பான கட்டிப்பிடி என்பதை புரிந்து கொள்ளும் ஞானம் இங்கே பலருக்கு இல்லை அவர்களின் கண் கள் மோடி வெறுப்பால் நிரம்பி உள்ளது ஆனால் அந்த படகு ஓட்டி அதை புரிந்து கொண்டார் 0
0
Kesavan Subramanian - ,
25 ஏப்,2026 - 12:31Report Abuse
correct 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
25 ஏப்,2026 - 10:21 Report Abuse
எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் வேலை தான் இருந்தாலும் மோடி ஒரு தனி ரகம் அன்பும் இருக்கும். 0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
25 ஏப்,2026 - 09:37 Report Abuse
நல்ல வேளை, நம்ம தலைவர் அப்படி போகவில்லை, ஒன்னு படகுக்காரரருக்கு பொளேர் விழுந்திருக்கும் இல்லையினா நம்ம ஊர்ல காலில் விழுந்த அம்மா மனு கொடுத்ததும் சைடா தள்ளிவிட்டாங்களே அதுபோல ஆகியிருக்கும் 0
0
HoneyBee - Chittoir,இந்தியா
25 ஏப்,2026 - 14:43Report Abuse
ஹஹஹஹா. 0
0
Reply
தமிழன் மணி - ,இந்தியா
25 ஏப்,2026 - 09:23 Report Abuse
இதையெல்லாம் நாங்க எம்ஜிஆர் காலத்துலேயே பாத்தாச்சு 0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
25 ஏப்,2026 - 10:01Report Abuse
ஆமா ..... காரே இல்லாத எங்க கிம்ச்சை மன்னர் கூட ஏழைகளிடம் எளிமையா பழகுனாரே >> 0
0
Field Marshal - Redmond,இந்தியா
25 ஏப்,2026 - 10:13Report Abuse
MGR கிழவிகளை கட்டிப்பிடிக்கும் படங்கள் தான் பார்க்க முடியும் 0
0
Mohanakrishnan - ,இந்தியா
25 ஏப்,2026 - 10:24Report Abuse
இப்போது எம்ஜிஆர் இல்லை அதனால் மோடியை எம்ஜிஆர் ஆக நேரில் பாருங்கள் 0
0
HoneyBee - Chittoir,இந்தியா
25 ஏப்,2026 - 14:47Report Abuse
அதனால் தான் இன்னைக்கு முளைச்ச கட்சி கூட எம்ஜிஆர் பேரை சொல்லி ஓட்டு கேட்குது. அதுதான் மக்கள் திலகம் இன்னும் ஏழைகளின் மனதில் வாழ்கிறார் 0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
-
2024 லோக்சபா தேர்தலை விட இம்முறை கூடுதலாக 50 லட்சம் பேர் ஓட்டளிப்பு
-
கொலம்பியாவில் பஸ்சில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 20 பேர் காயம்
-
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்
-
உயிரியல் பூங்கா விலங்குகளை வெயிலில் இருந்து காக்க ஏற்பாடு
-
கணவர் சாவில் சந்தேகம்: விசாரிக்க மனைவி புகார்
Advertisement
Advertisement