வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!

ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் வேறுபட்டு தான் காணப்படும். ஆனால், இதற்கு அப்பால், எந்த வகையில், வடிவமைப்பில் கட்டினாலும் அந்த வீடு தலைமுறைகள் கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவரும் புதிய வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறோம். ஆனால், கட்டுமான பணிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், புதிய கட்டடத்துக்கான பணி கள் தொடர்பான கண்காணிப்பில் குறைபாடு ஏற்படுகிறது.

உரிமையாளர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, எனது தொழில் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தரமாக வீடு கட்டும் பணியாளர்கள் அரிதாகி வருகின்றனர். தற்போதைய சூழலில், பெரும்பாலான பணியாளர்களுக்கே கட்டடம் குறித்த முழுமையான விபரங்கள் தெரிவதில்லை.

இத்தகைய சூழலில், புதிதாக வீடு கட்ட திட்டமிடுவோர், கட்டடம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஒரு கட்டடம் கட்டப்படுகிறது என்றால் அதன் அடிப்படை பாகங்கள் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அனைவரும் கட்டுமான பொறியாளராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிகளை திட்டமிடும் நிலையில் அதன் அடிப்படை பாகங்கள் என்ன, அதற்கான கட்டுமான வழிமுறைகள் என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதனால், நீங்கள் அணுகும் பொறியாளர், பணியாளர்கள் முறையாக செயல்படுகின்றனரா என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு கட்டுமான பொறியாளர், பணியாளர்கள் சரியாக, செயல்படுத்து தரமான முறையில் வீட்டை கட்டினாலும், அதில் அனைத்து வேலைகளும் சரியாக நடந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள சில அடிப்படை தகவல்களை உரிமையாளர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் கட்டடத்தின் அடிப்படை பாகங்கள் என்ன, அதன் பயன்பாடு என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கட்டடம் என்றால் அதன் அஸ்திவாரம், துாண்கள், பிளிந்த் லெவல் பீம், சில்லெவல் பீம், லிண்டல் லெவல் பீம்கள், ரூப் எனப்படும் மேல்தளம் ஆகிய பாகங்கள் கான்கிரீட்டால் அமைக்கப்படும்.

இதுதவிர, கட்டடத்தின் அஸ்திவாரம் முதல் மேல் தளம் வரையிலான சுவர்கள் எங்கு எப்படி கட்டப்பட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, இந்த பாகங்களுக்கான அளவுகள், தேவையான பொருட்கள் குறித்து மக்கள் அறிய வேண்டும்.

அப்போது தான் கட்டுமான பணிகள் தரமான முறையில் நடக்கிறதா என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.

ஒரு கட்டடம் என்றால் அதன் அஸ்திவாரம், துாண்கள், பிளிந்த் லெவல் பீம், சில்லெவல் பீம், லிண்டல் லெவல் பீம்கள், ரூப் எனப்படும் மேல்தளம் ஆகிய பாகங்கள் கான்கிரீட்டால் அமைக்கப்படும்.

Advertisement