அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்!
சென்னை: மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால், அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என, மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில், 2025 மார்ச் மாதத்துடன், கடந்த மார்ச் மாத நிலவரத்தை ஒப்பிட்டு, மின் தேவை விபரங்களை, மத்திய மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை, 69,934 மெகாவாட்டில் இருந்து, 73,805 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 19,679 மெகாவாட்டில் இருந்து, 19,822 மெகாவாட்டாக, மின் தேவை உயர்ந்து, முதலிடத்தில் உள்ளது.
@1brஆந்திர மாநில மின் தேவை, 13,107ல் இருந்து, 14,011 மெகாவாட்டாகவும்; தெலுங்கானாவில், 17,162ல் இருந்து, 18,548 ஆகவும், கர்நாடகாவில், 18,395ல் இருந்து, 18,655 ஆகவும்; கேரளாவில், 5,334ல் இருந்து, 5,844 மெகாவாட்டாகவும் அதிகரித்து உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில், 483 மெகாவாட்டில் இருந்து, 476 மெகாவாட்டாக குறைந்து உள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் முதல், மாலையில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, மின் வாரியத்தை, மத்திய மின் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, பற்றாக் குறையை சமாளிக்க, மின் கொள்முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த அயோக்கியர்களின் ஆட்சியில் ஒரு மெகா மின் வாட் உற்பத்திக்கும் வழி வகை செய்யவில்லை.
roof solar பலன் தரவில்லையா/இல்லையா
நிறைய வீடுகளில் சோலார் மின்சாரம் தயாரிக்க பேனல்கள் அமைத்திருக்கிறார்கள் ..கிரிக்கெட் ஸ்டேடிய கூரைகள் ரெயில்வே பிளாட்பாரங்களில் கூரைகள் அரசு அலுவலகங்களின் கூரைகள் சோலார் மின்சாரம் தயாரிக்க பேனல்கள் அமைக்க வேண்டும்
ஏற்கனவே போன வாரமே வரலாறு காணாத அளவுக்கு மின் நுகர்வு இருபதாயிரம் பொச்சே மெகாவாட் தாண்டிடுச்சு...
மின்சார வாரியத்தை திராவிடர்கள் எவ்வளவு சிறப்பாக நிர்வகித்து இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வெளியே தெரியும் காலம் கோடை காலம்.
நம்ம காசிக்கு தான் எம்புட்டு நாலெட்ஜ்...
அதையும் கூட கண்டுபிடிக்க ஒரு நாலெட்ஜ் வேணுமில்ல...
மத்தியில் 11 வருட ஆட்சியில் மத்திய காட்டு பட்டில் உள்ள நிலக்கரி தயாரிப்பு நிலையங்கள் என்ன முன்னேற்றம் கண்டுள்ளதுமேலும்
-
சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி? முதல்வர் ஸ்டாலின் பதில்
-
பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் பலி
-
‛கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன ஆம் ஆத்மி கட்சியின் கதை
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு
-
ராஜ்யசபாவில் தேஜ கூட்டணி பலம் அதிகரிப்பு
-
சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கட்சிப் பதவி; திருமா சமாளிப்பு