மே 4க்கு பின் திரிணமுல் குண்டர்கள் தப்ப முடியாது: பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை
கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலில் நடந்த பெருவாரியான ஓட்டுப்பதிவு, அங்கு காட்டாட்சி முடிவுக்கு வந்து, பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்பதை காட்டுகிறது. “தேர்தல் முடிவுகள் வெளியாகும் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு பின், அராஜகத்தில் ஈடுபட்ட ஆளும் திரிணமுல் காங்கிரஸ் குண்டர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது,” என, பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட கூறினார்.
மேற்கு வங்கத்தில் முதற் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கஉள்ளது. இதையொட்டி, டம் டம் பகுதியில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
முதற்கட்ட தேர்தலில் பெருவாரியாக ஓட்டுகள் அளித்து மகத்தான சாதனையை மேற்கு வங்க மக்கள் படைத்துள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டி அவர்கள் அளித்த அதிகளவிலான ஓட்டுகள் நிச்சயம் நல்ல பலனை தரும்.
இது, ஜனநாயகத்தின் வெற்றியை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் செயல்முறையின் மீது மக்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
மக்களின் இந்த தீவிர பங்கேற்பு எதிர்தரப்பினரை கவலையடைய செய்துள்ளது. இது, மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணத்தை எடுத்துரைக்கிறது. இதன் வாயிலாக திரிணமுல் காங்கிரசின் காட்டாட்சிக்கு சாவு மணி ஒலிக்க தொடங்கிவிட்டது.
அடுத்த மாதம் 4ம் தேதிக்கு பின், இங்கு ஆளுங்கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதன்பின், பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதி. அப்போது, மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு அநீதி மற்றும் அட்டூழியம் தொடர்பான கோப்புகள் மீண்டும் திறக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.
இது புரட்சிகளின் பூமி; வீரர்களின் பூமி என்பதை மேற்கு வங்க மக்களும், பா.ஜ., தொண்டர்களும் மறந்துவிட வேண்டாம். தேர்தல் முடிவுகளுக்கு பின், திரிணமுல் காங்கிரசின் குண்டர்கள் ஒளிந்து கொள்ள இடமிருக்காது. அவர்களை காப்பாற்றவும் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
@block_P@
மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர், 2024ல் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இறந்த பெண் டாக்டரின் தாயார் ரத்னா தேவ்நாத், அவரது சொந்த ஊரான பானிஹாட்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த கூட்டத்தில், மேடையில் பிரதமர் மோடியுடன் அவர் அமர்ந்திருந்தார்.
அப்போது பேசிய பிரதமர், “ரத்னா தேவ்நாத், தன் மகளை சிறந்த டாக்டராக்க விரும்பினார். ஆனால், அவரின் மகளை திரிணமுல் காங்கிரஸ் பறித்துக் கொண்டது. மம்தா அரசின் காட்டுமிராண்டிதனமான ஆட்சியாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது. அவரின் ஆட்சியில் சந்தேஷ்காளியில் நடந்த வன்கொடுமைகளை மக்கள் மறக்க மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்,” என்றார்.block_P
@block_Y@
தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கங்கை நதியின் கிளையான ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார். அப்போது தான் எடுத்த புகைப்படங்களை பிரதமர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'கங்கை நதி மேற்கு வங்கத்தின் ஆன்மா வழியாக பாய்கிறது. இங்கு படகு சவாரி செய்தது, கங்கை அன்னைக்கு என் நன்றியை தெரிவிக்க கிடைத்த வாய்ப்பு. இந்த பயணத்தில் வித்யாசாகர் சேதுவையும், ஹவுரா பாலத்தையும் மிக அருகில் ரசித்தேன்' என, குறிப்பிட்டிருந்தார். ஒரு மணி நேரம் படகு சவாரி செய்த பிரதமர், அதற்கான கட்டணமாக 1,000 ரூபாயை படகோட்டிக்கு அளித்தார்.block_Y
தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ....சுள்ளான் சொம்பு கூட்டம் அதிர்ச்சி..
தேர்தல் முடிவு மோடி டாடிக்கு இப்போதே எப்படி தெரிந்தது?
அரைவேக்காடுகளுக்கு புரியாது..
திரைகதை வசனம் இயக்கம்... மற்றும் நடிகர்.மேலும்
-
அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்!
-
என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் மோடி; மேற்குவங்க படகோட்டி பெருமிதம்
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
-
வீடு கட்டுவதை ஒத்திப்போடுவதால் செலவு அதிகரிக்கும்!
-
சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?