தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) ஆபரண தங்கம் கிராம், 14,160 ரூபாய்க்கும், சவரன், 1,13,280 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஏப்ரல் 24), தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 14,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 1,12,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5000 ரூபாய் சரிவடைந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
என்ன விலை விற்றால் என்ன. பெரிய நகை கடைகளில் கூட்டம் குறைந்த மாதிரி தெரிய வில்லை சென்னையில்
தங்கம் விலை என்றுமே இவ்வாறு போய் கொண்டு இருக்கிறதா
தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு கிடையாதுங்கமேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?