ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு

கடந்த 2025 - 26 நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் மட்டும், நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீடு, 8.18 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நிதியாண்டின் முடிவில் இது, 8.37 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, 6.51 - 7.44 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்த முதலீடு, கடந்த நிதியாண்டில் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக, முழு நிதியாண்டின் அன்னிய நேரடி முதலீடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது. முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த நாடாக இந்தியா தொடர்ந்து விளங்குகிறது என்பதை இது நிரூபிக்கிறது.

- அனந்த நாகேஸ்வரன் தலைமை பொருளாதார ஆலோசகர்

Advertisement