'பேண்டேஜ்' துணி உற்பத்தியாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம் --
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூலப் பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி 'பேண்டேஜ்' துணி உற்பத்தியாளர்கள், 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் பகுதிகளில், 7000க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள், பெரிய 'பேண்டேஜ்' துணி உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன.
இது தவிர சைஸிங், லேத், டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட உப தொழில்களில் 10,000க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
இங்கே உற்பத்தியாகும் 'பேண்டேஜ்' துணிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஈரான் போரால் நுால், பாலிதீன் பைகள், காஸ்டிக், பெராக்ஸைடு, விறகு, அட்டை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்தது.
மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஏற்றுமதி தேக்கம் காரணமாக 'பேண்டேஜ்' துணி உற்பத்தியாளர்கள் சங்கம் ஏப்.23 முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இதனால் 3வது நாளாக உற்பத்தி நிறுத்தப்பட்ட சூழலில், ரூ.1.5 கோடி வரை தொழிலாளர்களுக்கான ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.9 கோடி அளவிலான 'பேண்டேஜ்' துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்கள் விலை உயர்வால் 'பேண்டேஜ்' துணி விலையை 15 சதவீதம் உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
எனவே மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?