திருச்சூர் பூரம் திருவிழா தொட க்கம் யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று தொடங்கியது.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது.
இதை முன்னிட்டு, பரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டி போட்டு நடத்தும் யானைகளின் ஆடை, ஆபரண அலங்கார பொருட்களின் கண்காட்சியான 'யானைச் சமயம்' நேற்று முன்தினம் தொடங்கியது.
இதை பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு நெய்தலைக்காவு பகவதி அம்மன், குற்றுாரில் இருந்து, ஆடை, ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது, வடக்குநாதர் சன்னிதி நோக்கி புறப்பட்டார்.
செண்டை மேளத்துடன், வழித்தடத்தில் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். மதியம் 12:45 மணிக்கு ம ணிகண்டனால் பகுதியை அடைந்த அம்மன், கணபதி கோவில் அருகே நின்றதும், செண்டைமேளம் மு ழங்க தொடங்கியது.
அதன்பின், அம்மன் வடக்குநாதரின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து, தெற்கு கோபுர நடை வழியாக வெளியேறினார்.
அம்மன் எழுந்தருளிய யானை, துதிக்கையை உயர்த்தி மூன்று நாள் பூரம் திருவிழா தொடங்கியதை அறிவித்தது. இன்று, காலை இதே கோபுர நடை வழியாக, கணிமங்கலம் சாஸ்தா யானை மீது உற்சவர் எழுந்தருளியதும், பூரத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும், குடை மாற்றம் நிகழ்வும், இன்று மாலை நடக்கிறது.