ரூ.4.95 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ஆத்துார் ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 5,706 மூட்டைகள் கொண்ட, 3,449.51 குவின்டால் மஞ்சளை கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர்.

குவின்டால் விரலி ரகம், 13,089 முதல், 17,433 ரூபாய்; உருண்டை ரகம், 12,069 முதல், 14,899 ரூபாய்; பனங்காலி ரகம், 27,089 முதல், 36,099 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 4.95 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட, குவின்டாலுக்கு விரலி ரகம், 534 ரூபாய்; உருண்டை ரகம், 490 ரூபாய், பனங்காலி, 322 ரூபாய் வரை விலை உயர்ந்தது.

Advertisement