அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
துபாய்: அபுதாபியில் யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் துபாய்க்கு சென்றுள்ளார். யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்து பேசினார். மத்திய கிழக்கு பிராந்திய பதற்றம், பாதுகாப்பு குறித்து விவாதித்தார். எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது பிரதமர் மோடியின் வாழ்த்துகளையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்தும் அஜித் தோவல் பேசியுள்ளார். மோடிக்குத் தனது வாழ்த்துகளையும், இந்தியாவுக்கும், மக்களுக்கும் மேலும் வளர்ச்சியும் செழிப்பும் ஏற்பட வேண்டும் என்றும் யுஏஇ அதிபர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
யோவ் ஷேக்கு ஷோக்கா கீதய்யா உன்னோட பேரு , சின்னதா வையென் ?மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?