ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் ஏப்ரல் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை: பலத்த காற்று இதன் காரணமாக, இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்ட கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் ஏப்ரல் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 1,2ம் தேதி திருப்பத்தூர், வேலூர் ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலையை பொறுத்த வரையில், சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?