மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு

பொங்கலுார்:ஆண்டுதோறும் ஏப். 25 உலக மலேரியா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதை உலகில் இருந்து முற்றிலும் ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தத் தினம் உலக சுகாதார நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

பொங்கலுார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மலேரியா நோய் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் தலைமையில் நடந்தது. உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர்கள் பூ மலர் செல்வன், பவித்ரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement