வர்த்தகம் லாபகரம்; வழிகாட்ட திட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிமென்ட் மற்றும் ஸ்டீல்ஸ் வியாபாரிகள் நலச்சங்கத்தின், 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் 26 நடந்தது.
திருப்பூர் மாவட்ட அளவில் இயங்கி வரும் சிமென்ட் மற்றும் ஸ்டீல்ஸ் வியாபாரிகள், 144 பேர் இணைந்து, திருப்பூர் மாவட்ட சிமென்ட் மற்றும் ஸ்டீல்ஸ் வியாபாரிகள் நலச்சங்கம் துவங்கப்பட்டது. சங்கத்தின், 2வது ஆண்டு பொதுக்குழு, ஏப்ரல் 26 கூடியது.
கணியாம்பூண்டியில் உள்ள, திருப்பூர் பில்டர்ஸ் சென்டரில் நடந்த பொதுக்குழுவுக்கு, தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
சங்கச் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து, தலைவர் ராமசாமி பேசினார். ஆண்டு செயல் அறிக்கையை செயலாளர் மோகன்குமாரும், வரவு -செலவு அறிக்கையை பொருளாளர் இளங்கோவும் சமர்ப்பித்தனர்.
கூட்டத்தில், சங்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைப்பது என்றும், வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்து லாபகரமாக தொழிலை நடத்த வழிகாட்டுதல் வழங்குவது என்றும், அக்., மாதம் ரத்ததான முகாம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் குறித்து திருப்பூர் ஆடிட்டர்கள் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் பேசினார். சட்ட நுணுக்கங்கள் குறித்து வழக்கறிஞர் சோமசுந்தரம் பேசினார்.
**
புட்நோட்:
திருப்பூர் மாவட்ட சிமென்ட் மற்றும் ஸ்டீல்ஸ் வியாபாரிகள் நலச்சங்கத்தின், 2வது பொதுக்குழு கூட்டம், கணியாம்பூண்டி பில்டர்ஸ் சென்டரில் நேற்று நடந்தது. தலைவர் ராமசாமி, செயலாளர் மோகன்குமார், பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.