பேச்சு, பேட்டி, அறிக்கை
@quote@ விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் பேட்டி:
விருதுநகர் சட்டசபை தொகுதியில், 80 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள்
பதிவாகியுள்ளன. இங்கு, கண்டிப்பாக, எங்களின் சின்னமான, முரசு ஒலிப்பது
நிச்சயம். இதற்கு, இளைய வாக்காளர்கள் அதிகமானோர் ஓட்டளிக்க வந்ததே காரணம்.
மேலும், இம்முறை அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் ஓட்டளித்துள்ளனர். மே 4ல்,
தி.மு.க., கூட்டணிக்கும், தே.மு.தி.க.,வுக்கும் நல்ல செய்தி வரும்...
அடுத்த ஐந்து ஆண்டுகள், விருதுநகர் மக்களுக்கு உழைக்க காத்திருக்கிறேன்.
கடந்த, 2024ல், விருதுநகர் லோக்சபா தொகுதியில், தோல்வியை சந்தித்த தனக்கு,
மக்களின் அனுதாப ஓட்டுகள் கைகொடுத்திருக்கும்னு நம்பிக்கையா
இருக்காரோ?quote
அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்து, தி.மு.க.,வில் இணைந்துள்ள பன்னீர்செல்வம் பேட்டி:
முதல்வர் ஸ்டாலின், ஐந்து ஆண்டு காலம் மகத்தான ஆட்சியை வழங்கியதன் அடிப்படையில், தமிழக மக்கள், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி தருவர். 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக, ஸ்டாலின் முதல்வர் ஆவார். தேனி மாவட்டத்தின், நான்கு தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டா, இவருக்கு, 'வெயிட்'டான துறையில் அமைச்சர் பதவி உறுதி!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை, தொடர்ந்து நான் வலியுறுத்தியதோடு, பார்லிமென்டிலும் பேசினேன். தொடர்ந்து குரல் கொடுத்ததன் அடிப்படையில் நரிக்குறவர் இனத்தவர்களை, 2023ல், பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தனர். நரிக்குறவர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்திலும், இட ஒதுக்கீட்டிலும் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான திட்டங்கள் கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்துவேன்.
நரிக்குறவர் இனத்தவர்களுக்காக குரல் கொடுத்த இவரின் கட்சிக்கு, நடந்து முடிந்த தேர்தலில், அந்த சமூகத்தினர் கண்டிப்பா ஆதரவு தந்திருப்பாங்க!
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேச்சு:
பிரதமர் மோடி, ஒரு நல்ல தலைவர். 12 ஆண்டுகளாக திறமையான தலைமையை கொடுத்து வருகிறார். அவர், சமூக நீதிக்காகவும், பெண்களுக்காகவும், இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தார்; ஆனால், காங்., அந்த மசோதாவை எதிர்த்தது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூன்று முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அப்போதும், காங்., கட்சி ஒத்துழைக்கவில்லை. எனவே, எங்கள் பெண் பிள்ளைகளுக்கு துரோகம் செய்ததற்கான தண்டனை, அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
தொடர்ந்து, மூன்று லோக்சபா தேர்தல்களில் தோற்று, மூலையில் கிடக்கும் காங்கிரசுக்கு, அதை விட வேற தண்டனை வேண்டுமா?
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்