ரோட்டோர பள்ளத்தால் விபத்து அபாயம்

திருமங்கலம்: திருமங்கலம் விருதுநகர் ரோட்டில் வடகரை பிரிவு அருகே ரோட்டு ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

யார் எப்போது தோண்டினார்கள், எதற்காக தோண்டினார்கள் என்றே தெரியாத நிலையில் நகராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் பள்ளத்தை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

பள்ளம் மூடப்படாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் கவிழ்ந்து விபத்தில் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. விபரீதம் விளையும் முன்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோண்டிய பள்ளத்தை முழுமையாக மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement