அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
கோவை: தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட தகவல்படி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில், 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில், நாடு முழுதும் மாநிலம் வாரியாக, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவ மனைகளில், சிகிச்சை பெறுவோர் விகிதம், தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர், சராசரி சிகிச்சை செலவு, மருத்துவ காப்பீடு பயன்படுத்துவோர் குறித்த தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
இதில், தென் மாநிலங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் தான், 43 சதவீதம் பேர், உள்நோயாளியாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை தேர்வு செய்கின்றனர். அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில், 3.6 சதவீதம்; தனியார் மருத்துவமனையில், 53.4 சதவீதம் பேர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக கேரளா, 30 சதவீதம்; கர்நாடகா, 29.8 சதவீதம்; தெலங்கானா, 29.3 சதவீதம் என, பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, சராசரியாக, 1,357 ரூபாய் செலவாகிறது. இது, தேசிய சராசரியான, 6,631ஐ விட குறைவாகும். தமிழகத்தில், 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு, ஆரம்ப சுகாதார, துணை சுகாதார நிலையங்களில் பின்பற்றப்படும் பதிவேடுகள், தனியார் மருத்துவமனை புள்ளிவிபரங்கள் அடிப்படையில், தேசிய புள்ளியியல் அலுவலகம், 'ரேண்டம்' முறையில் சர்வே நடத்தி, ஆண்டுதோறும் முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதனடிப்படையில், மத்திய அரசு, சுகாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கான கட்டமைப்பு வசதிகள், விழிப்புணர்வு திட்டங்களை பரிசீலிக்கிறது' என்றனர்.
மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டியதால் வந்த வினை. மக்கள் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க பணமில்லை மொத்தமா 6.5 லட்சம் கோடி கடனை வாங்கி நம் தலையில் கட்டிவிட்டு தமிழகத்தை சீரழித்தது போதும் இனியாவது புதிய அரசு இந்த இழிநிலையை மாற்றவேண்டும் தமிழகம் தலைநிமிர
இதே போல் அறிவிப்பு எல்லாம் மோடிஜிக்கு தெரிந்துதான் அறிவிக்கிறார்களா என்று தெரியவில்லை. நல்ல வேலை தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னர் இந்த அறிவிப்பு வரவில்லை. வந்திருந்தால் அவ்வளவு தான் dmk கட்சியினர் துள்ளி குதித்திருப்பார்கள். குஜராத்தை உபியை பாருங்கள் எல்லா மாநிலங்கள் விட தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று ஜனாதிபதியே அறிவித்து விட்டார்கள் என்று கூத்தடிச்சு இருப்பார்கள்.
இதை வச்சிட்டு இனிமே எலன் மஸ்க் ரேஞ்சுக்கு பேசுவான்களே. காது கிழிஞ்சிடுமே.
கொஞ்சம் நாட்களாக டமிலகம் 11.9 வளர்ச்சின்னு தெரிஞ்ச வன் தெரியாதவன் போறவன் வர்ரவன் எல்லாரும் மேடை போட்டு இடி முழக்கம் லெவல்ல கத்திகிணு இருந்தானுங்க.
வரிஏய்ப்புக்காக வருமானத்தை குறைத்துக் காண்பிக்க தனியார் மருத்துவமனைகள் (இன்சூரன்ஸ் இல்லாத) நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவது சகஜம். அந்த புள்ளி விவரங்களை நம்பி கணக்கெடுப்பு எடுத்தால் புள்ளி விவரங்கள் தவறாகத்தான் இருக்கும். எத்தனை தனியார் டாக்டர்கள் உண்மையான வருமானத்தைக் காண்பிக்கிறார்கள்?.
உண்மைய மத்திய அரசு புள்ளி விவர ரிப்போர்ட் சொல்லுது , தமிழ் நாட்டுக்கு நல்ல செய்திதானே , இதில் நீ தவறு சொன்னா. அப்போ உனக்கு தமிழ் நாடு இல்லையா , அல்லது மத்திய அரசை குறை சொல்றியா ,
நீங்க சொல்வது போல , இந்திய ஒன்றியத்துலயே சிறந்த மருத்துவமனைகள் கொண்ட தமிழ்நாட்லயே இப்படின்னா,, உங்க பிஜேபி ஆளும் மாநிலங்களின் மருத்துவமனைகள் எந்த நிலைமையிலிருக்கும்???
பர்னால் மருந்து உற்பத்தியை அதிகரிக்க சொன்னா கேட்குறிங்களா இப்ப பாருங்க லபோ திபோ னு சில நண்பர்கள் வலியால் கதறி எழுதுவதை...
எங்கடா டபுள் என்ஜின் சர்க்காரை காணோம் ...
பணம் இல்லாத நோயாளிகளின் உள் அனுமதியில் இருந்து இறந்தவர் உடலை எடுக்க ஆம்புலன்ஸ் வரை நடக்கும் லஞ்சத்தை பற்றி எழுதினால் இதன் உண்மை தன்மை புரியும்.
மத்திய அரசுடன் இணக்கமாக இணைந்து அ.தி.மு.க அரசு கொண்டு வந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், சுகாதார கட்டமைப்பை இணைந்து சிறப்பாக செயல்படுத்தியது, மாரத்தான் ஓட்டமெல்லாம் ஓடாமல் அன்றைய மருத்துவம் நன்கு அறிந்த ஒரு மருத்துவர் விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து திட்டங்களை செயல் படுத்தியது. இவைகள்தான் சுகாதாரத் துறையில் தமிழகத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு காரணம்.
முழு செய்தியை கவனமாக படிக்கவும். தேசிய புள்ளியியல் ரிப்போர்ட் ஆண்டுக்கு ஒரு முறை வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தின் 43% சாதனை, 2025 வருடத்திற்கானதாகும். எப்போதோ 2021-இல் முடிந்த "இணக்கமான அரசு" செய்த சாதனையை காண 2020 வருடத்திற்கான புள்ளி விவரங்களை பார்க்கவும். எதிலும் சும்மா இடையே புகுந்து கட்சி அரசியல் பண்ண முயற்சி செய்ய வேண்டாம்.
என்னா இப்புடி பொட்டுணுன்னு போட்டு உடச்சிப்புட்டியளே. பாரீர் பாரீர் இதை நாங்கதான் பண்ணினோம் ன்னு பீலா உடுறதுக்கு தயார் பண்ண முடியாமலே போயிடுமே.