ராமநவமி உற்சவ விழா

நாமக்கல்:நாமக்கல், ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன் கான சபா சார்பில், ஆண்டுதோறும் ராமநவமி உற்சவ விழா நடந்து வருகிறது.


நடப்பாண்டு, கோட்டை, முல்லை மஹாலில், 112ம் ஆண்டு ராமநவமி உற்சவ விழா, ஏப்., 25ல் துவங்கி தினமும் அர்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை, ராமர்பட ஆவாகனத்துடன் விழா துவங்கி நடந்து வருகிறது.
இன்று காலை, 8:30 மணிக்கு அஷ்டபதி மற்றும் பஜனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதி, திவ்யநாம பஜனை மற்றும் தீபாராதனை நடக்கிறது.

நாளை காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாமம், வசந்தகேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடக்கிறது. 29 காலை, 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 10:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.

Advertisement