இடியும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகாவில் பொன்னம்பட்டி, கிழவனேரி கிராமங்களுக்கான வி.ஏ.ஓ., அலுவலகம் கிழவனேரியில் உள்ளது.
கட்டப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் போதிய பராமரிப்பு இன்றி கட்டடம் முழுமையாக சேதம் அடைந்து உள்ளது. பக்கவாட்டு சுவர்கள், துாண்கள், கூரை என அனைத்தும் பெயர்ந்து விழுந்து உள்ளன.
எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் முழுமையாக இடியும் என்ற நிலையில் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள், கிராம மக்கள் உயிரை கையில் பிடித்தபடி அலுவலகத்தில் பணியாற்றும் சூழ்நிலை உள்ளது.
உயிர் பலி ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வி.ஏ.ஓ., அலுவலகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். அல்லது மாற்று இடத்திலாவது புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்
Advertisement
Advertisement