'ஆட்சிக்கு விஜய் வந்தால் தானே!'
தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தஞ்சையில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணியை பொறுத்த வரை, அவர்களுக்குள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. ராகுல், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை.
'விஜய்க்கு மக்களிடம் ஈர்ப்பு உள்ளது. சில இடங்களில் அதிகப்படியான ஓட்டுகளை வாங்குவார். அவர், தனக்கென இந்த தேர்தலில், ஒரு ஓட்டு வங்கியை ஏற்படுத்துவார். அந்த ஓட்டு வங்கியால், எங்களின், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. விஜய் கொடுத்துள்ள மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற, 4.83 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'விஜய், ஆட்சிக்கு வந்தால் தானே, அதை பற்றி கவலைப்படணும்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்து, நகர்ந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்
Advertisement
Advertisement