சென்னை மாவட்டம் இனிதாக

ஆன்மிகம்

* கபாலீஸ்வரர் கோவில்

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான், கபாலீஸ்வரர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா எட்டாம் நாள் சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வேதவல்லி தாயார் புறப்பாடு - மாலை 5:30 மணி. ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* காரணீஸ்வரர் கோவில்

சித்திரைப் பெருவிழாவில் அஸ்தமானகிரி வீதி உலா - காலை 9:00 மணி. பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா - இரவு 7:00 மணி. பஞ்சமூர்த்தி புறப்பாடு - இரவு 10:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி - அம்பாள் உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சிறப்பு அபிஷேகம் - காலை 5:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பிரதோஷ, அபிஷேக, அலங்கார, ஆராதனை - மாலை 4:30 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஓம் கந்தாஸ்ரமம்

சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* மத்திய காசி விஸ்வநாதர் கோவில்

சித்திரை பிரம்மோத்சவ விழா. கற்பக விநாயகர் கோவிலில் அம்மை அப்பன் காட்சி - காலை 9:00 மணி. இடம்: சித்தர் பூமி, 7வது பிரதான சாலை, கண்ணகி நகர்.

* கோதண்டராமர் சுவாமி கோவில்

பிரம்மோத்சவம். திருத்தேர் - காலை 5:30 முதல். தோளுக்கினியான் - -இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.



பொது

* நாடகம்

'ஓர் இரவு' நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

Advertisement