தவறை தட்டி கேட்டது தவறா? மனைவி, மகள் கண் முன் பயணியை அடித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அராஜகம்
நமது நிருபர்
இலவச டீ, வடைக்கு ஆசைப்பட்டு தரமற்ற கடையில் நிறுத்துவதா என கேள்வி எழுப்பிய பயணியை மனைவி, மகள் கண் முன்னே அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரம் இருந்த கடையில் நிறுத்தி இருக்கின்றனர். அங்கு டிரைவர், கண்டக்டருக்கு டீ, வடை இலவசம் என்பதால் நிறுத்தி உள்ளனர். அந்த கடையில் டீ ஒன்று 25 ரூபாய் என கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டு பஸ்சில் மகள், மனைவியுடன் பயணித்த பயணி ஒருவர் ஆத்திரம் அடைந்தார்.
டீ 15 ரூபாய்க்கு விற்பனையாகும் கடையில் நிறுத்தாமல் ஏன் அதிக தொகைக்கு விற்பனையாகும் கடையில் நிறுத்துகிறீர்கள்? உங்களுக்கு இலவசமாக டீ, வடை வழங்குவதால் தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடையில் பஸ் நிறுத்துவீர்களா? அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் இடம் பயணி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து பயணியை அவரது குடும்பத்தினர், மனைவி மகள் முன்னிலையில் டிரைவர், கண்டக்டர் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் அடிக்காதீங்க... அண்ணா … அடிக்காதீங்கன்னு மகள், மனைவி கெஞ்சும் காட்சி இடம்பெற்றுள்ளது. குடும்பத்தினர் கண் முன்னே, பயணியை சரமாரியாக தாக்கிய டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வீடியோ பார்க்க…
குடும்பத்தினர் முன் பயணியை அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
ரீல்ஸ் வடிவில் வீடியோ பார்க்க…
வாசகர் கருத்து (23)
Siva Balan - ,
01 மே,2026 - 12:14 Report Abuse
அரசு பஸ் கண்டக்டர், ட்ரைவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சாக்கடை கலந்த உணவுகளையே சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஹோட்டலில் மட்டுமே பஸ்ஸை நிறுத்துவர். 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
01 மே,2026 - 12:11 Report Abuse
டிஸ்மிஸ் பண்ணனும்... 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
01 மே,2026 - 11:58 Report Abuse
அரசு பேருந்துகளை கக்கூஸ் நாற்றமெடுக்கும் தேனீர் கடையில் தான் நிறுத்துவர். உதாரணம், விக்கிரவாண்டி டோல்கேட் அருகில். ஏனெனில், அவர்கள் டெண்டர் எடுக்கும் முறையில், ஊழலில் கைவிட்டு அதிகம் கொடுக்கும் பணம். அதுதான் காரணம். இது சரி என்று வாதிட வரவில்லை. அதிக விலை தவறே. ஆனால், தனியார் வெளியூர் பேருந்துகள் நிறுத்துமிடம் சுத்தமாக இருக்கும். எனவே, நஷ்டத்தில் இயங்கும் பெரும்பாலான அரசு பேருந்துகளை தனியாருக்கு கொடுப்பதே நல்லது. டிக்கெட் கட்டணம், பர்மிட் மற்றும் நேரத்தை மற்றும் அரசு நிர்வகித்தால் போதும். தனியார் எனில், பயணிகள் மேல் கை வைக்க ஊழியர்கள் அஞ்சுவர். அரசு பேருந்து எனில், கும்மிடிப்பூண்டியில் பயணியாருடன் தகராறு எனில், கன்னியாகுமரி வரை வண்டிகள் ஓடாது. இது இந்தியாவின் அரசு துறைகளின் மூலம் பொதுமக்களுக்கு தீராத சாபக்கேடு. 0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
01 மே,2026 - 11:58 Report Abuse
அரசு அலுவலகம் அருகில் வேறு நல்ல சாப்பாட்டுக்கடைகள் இருக்கலாம். ஆனால் இந்த அரசு வண்டிகளும் சரி, இரவு நேரத்தில் செல்லும் நெடுந்தூர தனியார் வண்டிகளும் சரி இந்த மாதிரி டுபாக்கூர் சாப்பாட்டுக்கடைகளில்தான் வண்டிகளை நிறுத்துகிறார்கள். அதுவும் கழிவிடங்கள் இல்லாத இடங்களில்தான் . 0
0
Reply
Raghu - ,இந்தியா
01 மே,2026 - 11:55 Report Abuse
திராவிடியா "அப்பா" ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா கேவலம் 2 வடை டீக்காக பயணியை தாக்கிய அந்த 2 கேடுகெட்டவர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டு 6 மாதம் உள்ளே வைத்து கழி திங்க விட வேண்டும் குடும்பத்தினர் காலில் விழுந்து பொது மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் 0
0
Reply
SRIRAM - kovai,இந்தியா
01 மே,2026 - 11:54 Report Abuse
இது போன்ற கடைகள் ஒரு தொகையை போக்குவரத்துக்கு செலுத்தி வைத்திருக்கும் அந்த ரூட்ல போகிற எல்லா பஸ்ம் நின்னு போகணும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் சீலும் வாங்கணும் இது ஓட்டுநர் நடத்துனர் இருவர்க்கும் கொடுக்கப்படுள்ள ஆர்டர் அவங்க நிக்கலேனா இவர்கள் மீது நடவடிக்கை.... ஊழல் நிறைந்த நிர்வாகம்.... யாரும் சாப்பிடலான இது தானா குறைய வாய்ப்பு இருக்கு என்று நம்பலாம் 0
0
Reply
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
01 மே,2026 - 11:47 Report Abuse
இது தான் போக்குவரத்து துறையின் உண்மையான முகம். எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான். அரசு துறையும் வியாபாரிகளும் கை கோர்த்து மக்களிடம் கொள்ளை அடிக்கும் பழக்கம் மாற்றவேண்டும். 0
0
Reply
சாமானியன் - ,
01 மே,2026 - 11:40 Report Abuse
நெடுந்தூர பஸ் பயணங்களில் நடுவில் எந்த ஹோட்டல்களிலும் எதுவுமே ( டீ காஃபி உட்பட ) சாப்பிடாமல் இருப்பது நல்லது. 0
0
Reply
sri - ,
01 மே,2026 - 11:37 Report Abuse
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பொறுக்கிகளாகவும் ரவுடிகளாகவும் மாறிவிட்டனர் 0
0
Reply
Mahesh Rajan - ,
01 மே,2026 - 11:36 Report Abuse
அரசு ஊழியர்கள் வரி செலுத்துவோரின் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள். கண்ணியமாக சேவை செய்யத் தெரியாதவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் இதுபோன்ற வன்முறை நடத்தைகளில் மாண்புமிகு நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து தலையிட வேண்டும், மேலும் நீதியின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கை நிலைநாட்டப்பட வேண்டும். 0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
-
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர் *ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
-
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்
-
ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 2.11 லட்சம் கோடி ரூபாய்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்
Advertisement
Advertisement