தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது; இன்றைய நிலவரம் இதோ!

1


சென்னை: சென்னையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச நிலவரங்களால், தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) ஆபரண தங்கம் கிராம், ரூ.13,900க்கும், சவரன், 1,11,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்



நேற்று (ஏப்ரல் 30) காலை, தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றமில்லை. மாலை, தங்கம் விலை கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 14,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, 1,12,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ரூ.10 உயர்ந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 400 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement