கல்லடி திடல் ரோடு இருபுறமும் சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சேத்திடல் பகுதியில் இருந்து மருதவயல், கல்லடிதிடல் வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் மருதவயல் முதல் கல்லடி திடல் வரை, ரோட்டின் இரு ஓரங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன.
இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், வாகனங்கள் விபத்துக்களில் சிக்கி வருகின்றன. மேலும் எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விடும் டூவீலர் ஓட்டுநர்கள் முட்புதர்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோர கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement