எங்கள் காலனியில் நடந்த கலாட்டா!

ஆசிரியர் : தேன்மொழி இராஜேந்திரன்

வெளியீடு : மணிமேகலை பிரசுரம்

அலைபேசி : 91764 51934

பக்கம் : 192

விலை : ரூ.160

ஒ ரு நாவலும், 12 சிறுகதைகளும் அணிவகுக்கும் நுால்.

ஆசையாய் வளர்த்த பிள்ளை, படித்து முடித்து வேலை தேடி அமெரிக்காவில் தங்கிவிட்டால், பெற்றோர் மனநிலை எப்படி இருக்கும் என்ற மையக்கருவாக உள்ளது நாவல். வருமானம், வசதி இருந்தாலும், முதுமையில் தனிமை வாழ்வு எத்தகைய மன உளைச்சலை தரும் என்பதை துல்லியமாய் விவரிக்கிறது.

புத்தகமும் நானும் ஒரு பக்க கதை மனதை கனக்க வைக்கிறது. குழம்புப் பொடி கதை அல்ல, சில வீடுகளில் நிஜமாகவே நடந்த நிகழ்ச்சியை மையமாக கொண்டு உள்ளது. கேலியும், கிண்டலும் மனதை நோகடித்தாலும், ஓய்ந்து போகாமல் போராடி, ஜெயித்துக் காட்டுவதில் தான் வெற்றியின் ரகசியமே இருக்கிறது என்பதை சொல்லும் கதைகளின் தொகுப்பு நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Advertisement