ஹாக்கி போட்டி துவக்கம்  மாவட்ட அணிகள் பங்கேற்பு 

உடுமலை: மாவட்டங்களுக்கு இடையிலான ஹாக்கிப்போட்டிகள், உடுமலையில் இரு இடங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் வித்யாசாகர் கல்லுாரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

திருப்பூர், தர்மபுரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மாவட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

போட்டி துவக்க விழாவில், வித்யாசாகர் கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகள் இரு நாட்கள் நடைபெறுகிறது.

Advertisement