கூட்டாம்புளி குடிநீர் ஊருணி படிக்கட்டை சீரமையுங்கள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வரவணி ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டாம்புளியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியினர் பயனடையும் வகையில் குடிநீர் ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியில் மழைக்காலத்தில் தண்ணீரை தேக்கி கிராமத்தினர் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடிநீர் ஊருணி பாதுகாப்பற்ற நிலையில் திறந்த நிலையில் உள்ளதால் குடிநீர் ஊருணியை கால்நடைகள் அசுத்தம் செய்து வரும் நிலை உள்ளது.

மேலும், குடிநீர் ஊருணி படிக்கட்டு சேதமடைந்துள்ளதால் குடிநீர் எடுக்கச் செல்லும் பெண்கள் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள, ஊருணி படிக்கட்டுகளை சீரமைப்பதுடன் குடிநீர் ஊரணியை சுற்றி முள்வேலி அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Advertisement