போலீஸ் செய்திகள்: மதுபாட்டில்கள் பறிமுதல்

தேனி: உத்தமபாளையம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் 40. இவர் பெட்டி கடையில் மதுபாட்டில்களை விற்பனை செய்தார். தகவலறிந்து உத்தமபாளையம் போலீசார் கடையைசோதனை செய்தனர். அப்போது 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பெரியகுளத்தை சேர்ந்த வேலு 56, கண்டமனுார் பட்டறை அருகே மதுபாட்டில் விற்றார். தேனி மதுவிலக்கு போலீசார் 26 பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

மணல் லாரி பறிமுதல்

தேனி: ஆண்டிபட்டி வேலப்பர் கோவில் ரோட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றிகொண்டு டிப்பர் லாரி சென்றது. தேனி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர் மாரியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. மாரியம்மாள் குழுவினர் கொத்தபட்டி அருகே மணலுடன் சென்ற லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தியது தெரிந்தது. 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து ராஜதானி போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மோதி காயம்

தேனி: கோட்டூரை சேர்ந்தவர் கபிலன் 26. இவர் டூவீலரில் குமுளி- திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் சென்றார். பின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது போடியை சேர்ந்த மாரீஸ்வரன் 36, டூவீலரில் அதிவேகமாக சென்று மோதியதில் கபிலன் காயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெறுகிறார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement