24,200-க்கு மேலே சென்றால் ஏற்றம் வரக்கூடும்
சிறிய ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 11.30 மணியளவில் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 97 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.39 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.45 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடுகள் இறக்கத்துடனும், 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி பி.எஸ்.யு., பேங்க் குறியீடு அதிகபட்சமாக 2.15 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஆயில் & காஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.55 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,378 நிறுவனங்களின் பங்குகளில், 1,490 ஏற்றத்துடனும்; 1,783 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 50 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) சற்று கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது என்பது, டிரெண்ட் சற்று பியரிஷாக இருப்பதையே உணர்த்துகிறது. மேலும் மொமென்டம் இண்டிகேட்டர்களும் பலவீனமடைந்துள்ளன.
இந்த சூழலில் டெக்னிக்கல் அனாலிசிஸின் படி 24,200-ஐ ரெசிஸ்டென்ஸாகவும்; 23,850-ஐ சப்போர்ட்டாகவும் கொண்டு, ஒரு குறுகிய எல்லைக்குள் நிப்டி வர்த்தகமாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி முடிந்த பின்னர், முதல் வர்த்தக நாளான புதனன்று, செய்திகளுக்கு அதிக அளவிலான ரியாக்ஷன் வருவதற்குண்டான வாய்ப்பு உள்ளது. 24,200-க்கு மேல் ஓரிரு நாட்கள் நிறைவடையாத வரை மீண்டும் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது.
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்