தேர்தல் பணி ஊதியம்வழங்க கோரிக்கை
ராமநாதபுரம்: - சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட மீன்வளத்துறை பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மீன்வளத்துறை பாதுகாப்பு பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கவில்லை எனத் தெரிவித்தனர். மற்ற பிரிவு அரசு அலுவலர்கள், போலீசாருக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் மீன்வளத்துறை பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை. தேர்தல் செலவுகள் கணக்கிடப்பட்டு விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
சந்தை விலை நிலவரம்
-
3% வரை சரிவை சந்தித்த பொதுத்துறை வங்கி பங்குகள்
-
சிட்டி யூனியன் பேங்க் பங்கு 28% வரை உயர வாய்ப்பு காலாண்டு முடிவுகளுக்கு பின் 'சிட்டி யூனியன் பேங்க், எல் அண்டு டி., பைனான்ஸ்' பங்குகள் 28 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. 'சிட்டி யூனியன் பேங்க்' பங்கின் இலக்கு விலையை 'எலாரா கேபிட்டல்' 345 ரூபாயாகவும் (27 சதவீதம் உயர்வு), 'சாய்ஸ் புரோக்கிங்' 315 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளன. அதேபோல், '
-
24,200-க்கு மேலே சென்றால் ஏற்றம் வரக்கூடும்
-
தனியார் விடுதியில் தீ விபத்து; 50 பெண்கள் உயிர் தப்பினர்
-
என்.எஸ்.இ., முதலீட்டாளர் எண்ணிக்கை 13 கோடியானது