தென் மாவட்டங்களில் பதநீர் சீசன் விறுவிறுப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் பதநீர் சீசன், ஜூன்-ஜூலை மாதங்கள் வரை நீடித்து வருகிறது. இதனால் பனைத் தொழிலாளர்கள் தற்போது அதிகாலை முதல் மாலை வரை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பனைமரங்களில் ஏறி பதநீர் இறக்கும் பணிகள் அதிகாலையில் தீவிரமாக நடக்கின்றன. சேகரிக்கப்பட்ட பதநீர் உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோடை வெயிலில் உடல் சூட்டை தணிக்கும் இயற்கை பானமாக இருப்பதால், பொதுமக்களிடம் பதநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதனுடன், பனைமரங்களில் கிடைக்கும் நுங்கு பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. சாலையோரங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் மூலம் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.
பதநீரைத் தொடர்ந்து கருப்பட்டி உற்பத்தி யிலும் ஈடுபடுகின்றனர்.