விழுப்புரத்தில் மே தின விழா தொ.மு.ச., கொடியேற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் மே தின விழா நடந்தது.

தொ.மு.ச., தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாஜி அமைச்சர் பொன்முடி, தொ.மு.ச., கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'மே 1ம் தேதியான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் வரும் 4ம் தேதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி வெற்றி பெறப்போகும் சிறப்பாக கொண்டாட உள்ளோம். ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவார்' என்றார்.

தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement